ராதாபுரம் தொகுதி தேர்தல் வழக்கு உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி

 

புதுடெல்லி: கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் அப்பாவு போட்டியிட்டார். தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றார். இதை எதிர்த்து அப்பாவு தொடர்ந்த வழக்கை விரிவாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு கடந்த ஜூன் 3ம் தேதி தீர்ப்பு வழங்கி இருந்தது. அதில்,” 2016 சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது.

மேலும் 104 ஓட்டுகள் வித்தியாசத்தில் அப்பாவு வென்றது நிரூபணம் ஆகி உள்ளது என்று தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இன்பதுரை தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற உத்தரவுக்கு நீதிபதிகள்இடைக்கால தடை விதித்தனர்.

Related Stories: