காவிரியில் கர்நாடகம் நீர் திறக்காததால் டெல்டா மாவட்டங்களில் விவசாய தொழிலாளர்கள் வேலை இழந்து தவிப்பு

தஞ்சாவூர்: காவிரியில் கர்நாடகம் நீர் திறக்காததால் டெல்டா மாவட்டங்களில் விவசாய தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கர்நாடகம் தண்ணீர் திறக்காததால் உழவுப் பணி, நடவு, விதை தெளித்தல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் சாகுபடி பரப்பான 3 லட்சம் ஏக்கரில் 2.23 லட்சம் ஏக்கருக்கு பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் விவசாய கூலி வேலைக்காக 60 கி.மீ. பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பெண் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Stories: