பாக்சிங் அரையிறுதியில் அருந்ததி, சாக்‌ஷி: பதக்கங்கள் உறுதி!

கிளாஸ்கோ தொடரின் மகளிர் குத்துச்சண்டை 70 கிலோ எடைபிரிவு காலிறுதியில் நேற்று களமிறங்கிய இந்திய வீராங்கனை அருந்ததி சவுதாரி நியூசிலாந்தின் மார்கன் ஹெண்டர்சன் சவாலை சந்தித்தார். முதல் சுற்றில் 3-2 என முன்னிலை பெற்ற அருந்ததி 2வது சுற்றில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி 4-1 என அசத்தியதுடன் அடுத்த சுற்றில் 3-1 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மகளிர் 51 கிலோ எடைபிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை சாக்‌ஷி சவுதாரி 5-0, 5-0, 5-0 என தொடர்ச்சியாக 3 சுற்றிலும் அமர்க்களமாக விளையாடி வடக்கு அயர்லாந்தின் கெய்ட்லின் பிரையர்சை எளிதாக வீழ்த்தினார்.

அருந்ததி, சாக்‌ஷி இருவரும் அரையிறுதிக்கு முன்னேறியதால் பாக்சிங்கில் மேலும் 2 பதக்கங்களை இந்தியாவுக்கு உறுதி செய்துள்ளனர். ஏற்கனவே பிரீத்தி பவார், ஜடுமனி சிங், பிரியா கங்காஸ் ஆகியோரும் அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: