சில்லி பாயின்ட்…

* வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்டில், விக்கெட் கைப்பற்றியபோது அளவுக்கதிகமாக ஆர்ப்பரித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் பவுலர்கள் அப்பாஸ், ஷாஷத் இருவருக்கும் தலா ஒரு டிமெரிட் புள்ளி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

* நெதர்லாந்து ஆல் ரவுண்டர் ரியான் டென் டஸ்சேட் (46 வயது), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கிரிக்கெட் வியூக தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* 2027ல் நடைபெற உள்ள ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடருக்கான அணியில் 17 வீரர்களை தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா கோரிக்கை வைத்துள்ளது. புதிய அட்டவணை திட்டப்படி பைனல் வரை முன்னேறும் அணி முன்பு போல 11 போட்டிகளுக்கு பதிலாக 13 போட்டிகள் விளையாட வேண்டி இருக்கும் என்பதால், கூடுதலாக 2 வீரர்கள் தேவைப்படுவதாக ஆஸி. தரப்பு தெரிவித்துள்ளது.

* தி ஹண்ட்ரட் தொடரின் 10வது போட்டியில் மான்செஸ்டர் சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடன் மோதிய சன்ரைசர்ஸ் லீட்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. சூப்பர் ஜயன்ட்ஸ் 100 பந்தில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன் (பட்லர் 63*, கிளாஸன் 53); சன்ரைசர்ஸ் லீட்ஸ் 88 பந்தில் 2 விக்கெட் இழப்புக்கு 186 (மிட்செல் மார்ஷ் 63, கேப்டன் கிராவ்லி 56*, ஹாரி புரூக் 42). ஆட்ட நாயகன்: மார்ஷ்.

* டி20 போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் 15 வயது வைபவ் சூரியவன்ஷி ஒரேயடியாக 230 இடங்கள் முன்னேறி 48வது இடத்தை பிடித்துள்ளார். இஷான் கிஷன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

Related Stories: