முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மனைவி சென்னம்மா காலமானார்

பெங்களூரு: முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடாவின் மனைவி சென்னம்மா (89) வயது முதிர்வு காரணமாக உடல்நலம் குன்றிய நிலையில், பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக அவர் காலமானார். ஹாசன் தாலுகாவில் உள்ள முட்டிகே ஹிரேஹள்ளியைச் சேர்ந்த சென்னம்மா, எச்.டி.தேவகவுடாவை 1954ம் ஆண்டு மே 25ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியருக்கு 4 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். ஹரதனஹள்ளியில் இன்று சென்னம்மாவின் இறுதிச்சடங்கு நடக்கிறது.

Related Stories: