பட்டுக்கோட்டையில் தென்னை விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் பிரம்மாண்ட பேரணி

 

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் தென்னை விவசாயிகள் 100க்கணக்கானோர் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு 3 தாலுகாக்களை உள்ளடக்கிய மண்டல மாநாட்டில் நூற்றுக்கணக்கான தென்னை விவசாயிகள் பங்கேற்ற்றனர். உரித்த முழுத் தேங்காயாக அரசே கொள்முதல் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 300 நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியதுடன், ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக அமல்படுத்த வற்புறுத்தி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தென்னை விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்த பேரணியில் தஞ்சை எம்.பி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு திருவையாறு 3 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.

கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 300 நிர்ணயம் செய்ய வேண்டும், உரித்த தேங்காய்களை அரசை கொள்முதல் செய்ய வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் தென்னை விவசாயிகள் சுமார் 100க்கணக்கானோர் இன்று பேரணி நடத்தினர். பேரணி பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் பெரியார் சிலையிலிருந்து புறப்பட்டு நாடியம்மன் கோயில் சாலை வழியாக வந்து அதே சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தை அடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட தென்னை விவசாயிகள் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை, எனவே ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு வந்தனர்.

பேரணியை தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் மண்டல அளவிலான தென்னை விவசாயிகள் மாநாடு நடந்தது மாநாட்டில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு 3 தாலுக்கா பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி எம்எல்ஏக்கள் பட்டுக்கோட்டை அண்ணாதுரை ஒரத்தநாடு வைத்திலிங்கம் திருவையாறு துரை சந்திரசேகரன் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில செயலாளர் மாசிலாமணி, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க கௌரவத் தலைவர் வழக்கறிஞர் ராமசாமி, தலைவர் பேராசிரியர் லெனின், செயலாளர் பாலசுந்தரம், பொருளாளர் பாஸ்கர் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் ஒன்றிய, மாநில அரசுகள் உரித்த முழுத் தேங்காயாக அரசே கொள்முதல் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை (மினிமம் சப்போர்ட் ப்ரைஸ்) நிர்ணயம் செய்ய வேண்டும். கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 300 நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், இந்த தீர்மானங்களை உடனடியாக ஒன்றிய, மாநில அரசுகள் அமல்படுத்த வற்புறுத்தி மாநில அளவிலான மிகப்பெரிய போராட்டங்களை நடத்த உள்ளோம் என்று விவசாயிகள் மாநாட்டில் அறிவித்தனர்.

Related Stories: