சேலம்: சட்டமன்ற உறுப்பினர்களை இரவல் வாங்கிதான் விஜய் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். நூற்றாண்டு கண்ட காங்கிரஸ் கட்சி பரிபாத நிலையில்தான் உள்ளது. காங்கிரஸில் என்ன இருக்கிறது? கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான் காங்கிரஸின் நிலைமை. திமுக கூட்டணியில் வெற்றி பெற்று தவெகவுக்கு சென்று பதவி வாங்கியதுதான் காங்கிரஸின் கொள்கையா. தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு, தேர்தலுக்குப் பின்பு ஒரு பேச்சா? என தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
