விம்பிள்டன் டென்னிஸ் பைனலில் அலெக்சாண்டர்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, ஜெர்மனி நட்சத்திரம் அலெக்சாண்டர் ஸ்வெரவ் தகுதி பெற்றார். அரையிறுதியில் யு.கே வீரர் ஆர்தர் ஃபெரியுடன் நேற்று மோதிய ஸ்வெரவ், டை பிரேக்கர் வரை நீடித்த முதல் செட்டை 7-6 (7-0) என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார். அதே வேகத்துடன் அடுத்த செட்டில் ஆதிக்கம் செலுத்திய அவர் 6-2 என வென்று 2-0 என முன்னிலையை அதிகரித்தார்.

அலெக்சாண்டர் ஸ்வெரவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய ஆர்தர் எதிர்ப்பின்றி சரணைடைய, ஸ்வெரவ் 7-6 (7-0), 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறினார். நம்பர் 1 வீரரும் நடப்பு சாம்பியனுமான யானிக் சின்னர் (இத்தாலி), செர்பிய சாதனையாளர் நோவாக் ஜோகோவிச் இடையே நடைபெறும் 2வது அரையிறுதியில் வெற்றி பெறுபவருடன் அலெக்சாண்டர் பைனலில் பலப்பரீட்சை நடத்துவார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செக் குடியரசின் கரோலினா முச்சோவா லிண்டா நோஸ்கோவா மோத உள்ளனர். முதலாவது அரையிறுதியில் முச்சோவா அமெரிக்காவின் கோகோவை போராடி வென்ற நிலையில், 2வது அரையிறுதியில் நோஸ்கோவா 6-4, 6-4 என்ற நேர் செட்களில் மார்தா கோஸ்டியுக்கை (உக்ரைன்) வீழ்த்தினார்.

Related Stories: