பிரிஸ்டல்: இந்திய அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 13.5 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்நிலையில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 79* ரன்களும், ஃபிலிப் சால்ட் 59* ரன்களும் எடுத்தனர்.
