லண்டன்: இந்தியா இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. சமீபத்தில் நடந்த ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரில் அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறிய இந்திய மகளிர் அணி, அடுத்து இங்கிலாந்துடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மோதுகிறது.
* லார்ட்ஸ் மைதானத்தின் 142 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில், மகளிர் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி முதல் முறையாக நடக்க உள்ளது குறிப்பிட த்தக்கது.
* மகளிர் டெஸ்ட் போட்டி 4 நாள் மட்டுமே நடைபெறும். ஒரு நாளில் குறைந்தபட்சம் 100 ஓவர்கள் வீசப்பட வேண்டும்.
* ஃபாலோ ஆன் தர 200 ரன்னுக்கு பதிலாக 150 ரன்னே போதுமானது.
* மகளிர் கிரிக்கெட்டில் இதுவரை இரண்டு 5 நாள் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடந்துள்ளன.
இந்தியா: ஹர்மான்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணை கேப்டன்), யஸ்டிகா பாட்டியா, ஹர்லீன் தியோல், கிரந்தி கவுட், ரிச்சா கோஷ், பிரியா பூனியா, ஸ்நேஹ் ராணா, ரேணுகா சிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ், சாயாலி சத்கரே, ஷபாலி வர்மா, நந்தனி ஷர்மா, தீப்தி ஷர்மா, ஸ்ரீ சரணி.
இங்கிலாந்து: ஸ்கிவர் பிரன்ட் (கேப்டன்), டாமி பியூமான்ட், லாரென் பெல், மாயா பவுசியர், ஆலிஸ் கேப்ஸி, கோர்டீன் கோல்மேன், சோபி எக்லஸ்டோன், லாரென் பைலர், அமி ஜோன்ஸ், ஹீதர் நைட், எம்மா லேம்ப், கிரேஸ் பாட்ஸ், எலனார் த்ரெல்கெல்ட், மேடி வில்லியர்ஸ், இஸ்ஸி வோங்.
