பைபர், ஷகிரா, மடோனா, பிடிஎஸ்… நிறைவு விழா கோலாகலம்

பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் பரபரப்பான இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், ஜூலை 19ம் தேதி நியூ ஜெர்சி அரங்கில் நடைபெற உள்ள பைனலின் இடைவேளையின்போது கோலாகலமான இசை, நடனத்துடன் கூடிய நிறைவு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். 11 நிமிடங்களுக்கு நடைபெற உள்ள அந்த நிகழ்ச்சியில் பிரபல நட்சத்திரங்கள் ஷகிரா, மடோனா, ஜஸ்டின் பைபர் மற்றும் தென் கொரியாவின் பிடிஎஸ் குழுவினர் இசை மழை பொழிவதுடன் அச்சத்தலான நடனமும் ஆடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர்.

இவர்களுடன் ஆஃப்ரோ பீட் ராக் ஸ்டார் புர்னா பாய், வெனிசுலாவை சேர்ந்த இசைநடத்துனர் கஸ்டவோ டுடாமெல், பல விருதுகளைக் குவித்த பிஎஸ்22 குழுவினரின் கோரஸ் என நிகழ்ச்சியை வேற லெவலுக்கு திட்டமிட்டுள்ளனர்.கோல்டுபிளே இயக்குனர் கிறிஸ் மார்டின் வடிவமைத்துள்ள நிகழ்ச்சியின் மூலம் கிடைக்க உள்ள பல கோடி ரூபாய் நிதியை உலகளாவிய கல்வி திட்டத்திற்கு வழங்க உள்ளதாக ஃபிபா அறிவித்துள்ளது.

Related Stories: