சென்னை: ஒரு வாரமாகியும் குற்றச்சாட்டுக்குள்ளான கார்த்தி, மாது, மோனி, பரத் நபர்கள் கைது செய்யப்படவில்லை என்ற தகவல்கள் பொதுமக்களிடம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன.
பூவிருந்தவல்லி காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரன் அவர்கள் இந்த வழக்கில் சட்டப்படி தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளாரா? அல்லது கைது நடவடிக்கை தாமதமடைவதற்கான காரணம் என்ன? சமூக வலைதளங்களில் பல்வேறு ஊகங்களும், “ஸ்வீட் பாக்ஸ்” போன்ற விமர்சனங்களும் பரவி வருகின்றன. அவை உண்மையா, ஆதாரமற்றவையா என்பதை காவல்துறையே வெளிப்படையாக விளக்க வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றமற்றவர்கள் என்றால் அதையும், கைது செய்ய வேண்டிய நிலை இருந்தும் தாமதம் ஏற்பட்டிருந்தால் அதற்கான காரணத்தையும் பொதுமக்களுக்கு தெரிவிப்பது காவல்துறையின் பொறுப்பு. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதைக் காவல்துறை தனது செயல்பாட்டின் மூலம் நிரூபிக்க வேண்டும்.
