நாளை மற்றும் 12ம் தேதி 41 மின்சார ரயில்கள் ரத்து

 

திருவள்ளூர்: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரை – தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே ஜூலை 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அன்று காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை (5 மணி நேரம்) மின்சார ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.அதன்படி சென்னை கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருமால்பூர் மற்றும் காஞ்சிபுரம் இடையே இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் 41 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

மேலும் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில்கள் காலை 10.30 மணி முதல் மதியம் 3.45 மணி வரை புறப்பட வேண்டிய 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.​அதைப்போன்று மறுமார்க்கத்தில் கடற்கரை நோக்கி வரும் தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் ஆகிய இடங்களிலிருந்து காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை புறப்பட வேண்டிய 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பயணிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருமால்பூர் ஆகிய பகுதிகளுக்கு இடையே குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும்.

Related Stories: