சட்ட சேவைகள் குழுத்தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா நியமனம்

புதுடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், உச்சநீதிமன்ற சட்ட சேவைகள் குழுவின் தலைவராக நீதிபதி நாகரத்னாவை நியமித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் சட்ட சேவைகள் தலைவராக 2025ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி முதல் பணியாற்றிய நீதிபதி மகேஸ்வரி ஜூன் 28ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து நீதிபதி நாகரத்னா உச்சநீதிமன்ற சட்ட சேவைகள் குழுவின் தலைவரான நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதில்,‘‘சட்ட சேவைகள் அதிகாரச் சட்டம், 1987ன் பிரிவு 3ஏவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னாவை உச்சநீதிமன்ற சட்ட சேவைகள் குழுவின் தலைவராக ஜூன் 29ம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: