பெங்களூருவில் பாறை உருண்டு விழுந்து சோகம் 7 பேர் உடல் நசுங்கி பலி: விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு

பெங்களூரு: பெங்களூரு அருகில் கல்குவாரியில் தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தபோது, திடீரென பெரிய பாறை ஒன்று விழுந்ததில், 7 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பெங்களூரு தெற்கு மாவட்டம், மாதபட்டணா கிராமத்தின் அருகில் உள்ள ஹுலுவேனஹள்ளி கிராமத்தில் 3.30 ஏக்கரில் காவிரி கிரஷர் என்ற கல் குவாரி இயங்கி வருகிறது. 30 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் குவாரி எடுக்கப்பட்டுள்ளது.

கீழ் பகுதியில் ஒரு குவாரியும் மேல் பகுதியில் மற்றொரு குவாரி இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல், தொழிலாளர்கள் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மேல் பகுதியில் உள்ள குவாரியில் இருந்து பெரிய பாறை ஒன்று உருண்டு கீழே விழுந்தது.

இதில் குவாரி அடிவாரத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் மேல் பாறை விழுந்ததில் மத்திய பிரசேதம், சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சத்ய நாராயணசிங், புவனேஷ்வர்சிங், ராவணதார்சிங், நேஹார், ராஜேந்திர பிரசாத், ராஜ்பால் மற்றும் கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டத்தை சேர்ந்த ராமு ஆகிய 7 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் குலாப்சிங், நோஹார்சிங், ராஜ்பால், ஜோட்டு மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆனந்த் ஆகிய 5 தொழிலாளர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related Stories: