தீயணைப்புத்துறை இயக்குநராக டிஜிபி வெங்கடராமன் நியமனம்

சென்னை: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநராக டிஜிபி வெங்கடராமன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு உள்துறை செயலாளர் மணிவாசன் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக சிவில் சப்ளை சிஐடி டிஜிபியாக இருந்த வெங்கடராமன் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தீயணைப்புத்துறை இயக்குநராக இருந்த டிஜிபி சீமா அகர்வால் நேற்று ஓய்வு பெற்ற நிலையில் வெங்கடராமன் நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்றாலும் சீமா அகர்வால் தற்போது தீயணைப்புத்துறை ஆணைய தலைவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: