முகம் சிதைத்து, கை மணி கட்டுகளை அறுத்து இளம்பெண் படுகொலை

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ராஜாக்கல் ஊராட்சிக்குட்பட்ட கூத்தாண்டவர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்(40). செக்யூரிட்டி வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி தனலட்சுமி (36), பேரணாம்பட்டு பகுதியில் ஒருவர் வீட்டில் நோயாளியாக உள்ளவருக்கு பணிப்பெண் வேலை செய்து வந்துள்ளார். இதனால் 10 நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று விஜயகுமார் வீட்டில் இருந்து அழுகிய துர்நாற்றம் வருவதாக அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து மேல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் வீட்டில் சோதனை செய்தபோது வீட்டின் சிலாப்பில் முகம் சிதைந்து, கால்கள் கட்டப்பட்டு இரண்டு கை மணிக்கட்டுகளின் நரம்புகள் அறுக்கப்பட்டு அழுகிய நிலையில் தனலட்சுமி சடலமாக கிடந்தார். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து சந்தேகத்தின்பேரில் தனலட்சுமியின் கணவர் விஜயகுமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories: