சென்னை: கடந்த 2023ம் ஆண்டில் பா.ஜ. மாநில தலைவராக அண்ணாமலை இருந்தபோது தி.மு.க பிரமுகர்களின் சொத்து விவரங்கள் என்ற பெயரில் ‘தி.மு.க ஃபைல்ஸ்’ என்ற பட்டியலை வெளியிட்டார். இதையடுத்து, தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்பியதாக அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சூழலில், வழக்கின் முக்கிய கட்டமாக அண்ணாமலை நேரில் ஆஜராகி புகார்தாரரான டி.ஆர்.பாலுவிடம் நேரடியாக குறுக்கு விசாரணை நடத்தியிருந்தார். இந்த நிலையில், அண்ணாமலைக்கு எதிரான இந்த அவதூறு வழக்கை மேற்கொண்டு நடத்த விரும்பவில்லை என்று டி.ஆர்.பாலு வாபஸ் பெற்றார். அரசியல் சூழலில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக இந்த வழக்கு திரும்ப பெறப்பட்டதாக டி.ஆர்.பாலு தரப்பில் கூறப்படுகிறது.
