பண்ணை வீடுகளில் சொட்டுநீர் பாசன முறையில் தென்னை சாகுபடி

*விவசாயிகள் ஆர்வம்

கரூர் : தாந்தோணி ஒன்றிய பகுதியில் பெரிய அளவில் பண்ணை வீடுகளில் சொட்டு நீர் முறையில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் உணவு தானியங்களில் ஒன்று தேங்காய். உலகளவில் தேங்காய் உற்பத்தியில் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் உள்ளன.

இந்த வெப்பமண்டல நாடுகள் உலகளாவிய தேங்காய் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன, இது மொத்த உற்பத்தியில் சுமார் 72%. இந்தோனேசியா, உலகின் முதன்மை தேங்காய் உற்பத்தியாளர், அதிகபட்ச பரப்பளவில் சாகுபடி செய்கிறது.

பிலிப்பைன்ஸ், அதிக தேங்காய் எண்ணெய் மற்றும் கொப்பரை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அதிகளவில் தேங்காய் உற்பத்தி நடைபெறுகிறது.

இலங்கையில் தரமான தேங்காய் மற்றும் தேங்காய் பொருட்களை உற்பத்தி செய்கிறது.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தேங்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பொள்ளாச்சி, தாராபுரம் உடுமலைப்பேட்டை, ஆனைமலை டெல்டா மாவட்டங்களில் தஞ்சை, பேராவூரணி பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் தரமான தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போதிய கூலி ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் முழுமையாக தேங்காய் சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.

முதல் 5 ஆண்டுகள் தேங்காய் மரத்தை பராமரித்தால், அதன் பின்பு சுமார் 20 முதல் 35 ஆண்டுகள் வரை முழுமையான பலன் கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு அதில் விவசாயிகள் கூடுதல் ஆர்வம் காட்டுகின்றனர்.தென்னை விவசாயம், வெப்பமண்டல காலநிலைக்கு ஏற்ற, நீண்டகால நிலையான வருமானம் தரும் தோட்டக்கலை பயிராகும்.

இது சரியான மண், நீர் மேலாண்மை, மற்றும் தரமான கன்றுகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஏக்கருக்கு அதிக லாபம் ஈட்டகலாம்.மண் மற்றும் தட்பவெப்பநிலை: நன்கு வடிகால் வசதியுள்ள செம்பொறை, வண்டல் மண் சிறந்தது. கடல் மட்டத்திலிருந்து 600 மீ உயரம் வரை நன்கு வளரும். மரங்களுக்கு இடையே 7.5 \(\times \) 7.5 மீட்டர் (சுமார் 25-28 அடி) இடைவெளி விட்டு, ஜூன்-டிசம்பர் மாதங்களில் நடுவது சிறந்தது.

கன்றுகள் நட்ட முதல் 3-4 ஆண்டுகளுக்கு முறையான தண்ணீர் பாய்ச்சுதல் அவசியம், குறிப்பாக கோடையில் தென்னை மரங்கள் காயாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தென்னையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கொக்கோ, மிளகு, வாழை போன்ற ஊடுபயிர்களைப் பயிரிட்டு கூடுதல் வருமானம் பெறலாம். காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன்வண்டு மற்றும் வேர் வாடல் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து மேலாண்மை செய்தல் வேண்டும்.

தென்னை வளர்ச்சி வாரியம் அங்கீகரித்த நாற்றங்கால்களில் தரமான குட்டை, நெட்டை அல்லது வீரிய ரக கன்றுகளைத் தேர்வு செய்யவும்.மதிப்புக்கூட்டல்:

தேங்காயாக விற்பதை விட, எண்ணெய், கொப்பரை, இளநீர், தென்னை நார் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக விற்பனை செய்வதன் மூலம் லாபத்தை அதிகரிக்கலாம்.கரூர் பகுதியில் தேங்காயிலிருந்து உரிக்கப்படும் யார் மற்றும் பிற பொருட்களை கொண்டு வெள்ளன் சபரி தயார் செய்யப்பட்டுஏற்றுமதி செய்யப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் வாங்கல் வேலாயுதம்பாளையம் நொய்யல் வேட்ட மங்கலம், தாந்தோணி ஒன்றியம் ஜெகதாபி, மூக்கணாங்குறிச்சி ஆகிய பகுதிகளில் நவீன சொட்டுநீர் முறை தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

Related Stories: