விஜய் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் மின்வெட்டில் நம்பர் 1 தொகுதியாக பெரம்பூரை மாற்றியுள்ளார்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி

சென்னை: நான் முதல்வன் திட்டத்தை கைவிடுவது ஏன் என்று முதல்வர் விஜய் பதில் சொல்ல வேண்டும்” என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசினார். 40 நாள் தவெக ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை. ஆளுநர் உரை ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தேசிய கீதம் பாடப்பட்டது மரபு மீறல். சட்டப்பேரவையில் தேசிய கீதம்போல் தமிழ்த்தாய் வாழ்த்தும் 2 முறை பாடப்பட்டிருக்கலாம். தமிழ்த்தாய் வாழ்த்தைவிட ஆளுநர் முக்கியம் என்று தவெக அரசு நினைக்கிறதா? என கேள்வி எழுப்பினர்.

திமுகவின் கோரிக்கையை ஏற்று, மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தாமல் வழங்கியதற்கு உதயநிதி நன்றி தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். நான் முதல்வன் திட்டத்தால் 41 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். நான் முதல்வன் திட்டத்தை முடக்க முயற்சி செய்கின்றனர்.

ஆளுநர் உரை மிஷன் அண்ட் விஷனை கொண்டதாக இருந்திருக்க வேண்டும். எதிர்க்கட்சியாக மட்டுமல்ல, ஆளுங்கட்சி வரிசையிலும் எங்கள் வாக்குகள் உள்ளன. யுபிஎஸ்சி தேர்வில் வென்றவர்களில் 60 ல் 56 பேர் நான் முதல்வன் திட்ட பயனாளிகள். திமுக அரசில் தமிழ்நாடு அடைந்த பொருளாதார வளர்ச்சியை டெல்லியில் விஜய் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் பெண்கள் முன்னேற்றம், பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாக முதலமைச்சரே டெல்லியில் பேசியுள்ளார். திமுக அரசின் திட்டங்களால் நல்லது நடந்தால் அதற்கு தவெக அரசு தனது ஸ்டிக்கரை ஒட்டுகிறது. திமுக ஆட்சியில் நடந்த திட்டங்களையே முதல் முறையாக அறிமுகப்படுத்துவதுபோல் பொய் செய்தி பரப்புகின்றனர்.

அறநிலையத்துறையே இருக்கக் கூடாது என்ற பாஜகவின் குரலாக தவெக உள்ளதா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அறநிலைத்துறை பள்ளிகள் நடத்தக்கூடாது என்பது பாஜகவின் நிலைப்பாடு, அதனை தவெக அரசு செயல்படுத்தப்போகிறதா? என்று கேள்வி எழுப்பினர். அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கத்துக்கு பதிலளிக்க சேகர்பாபுவுக்கு சபாநாயகர் அனுமதி மறுப்பு தெரிவித்தார்.

வாக்குறுதிப்படி தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். விஜய் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் மின்வெட்டில் நம்பர் 1 தொகுதியாக பெரம்பூரை மாற்றியுள்ளார். அண்ணன் ஆட்சிக்கு வந்தால் பவர் என கூறியவர்கள் தற்போது தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டதாக புலம்பல். மின்வெட்டால் திமுக பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டது. மின்வெட்டால் நோயாளி உயிரிழந்தனர். சென்னை வியாசர்பாடியில் மின்வெட்டால் 4 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

மின்சாரம் துண்டிப்பு குறித்து முறையிட மக்களுக்கு தொகுதி எம்.எல்.ஏ.க்கள் யாரென்றே தெரியவில்லை. தமிழ்நாட்டில் மின்வெட்டால் முதன்முறையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது இந்த ஆட்சியில்தான். மின்வெட்டு காரணமாக திமுக மட்டுமல்ல விசிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டால் திருமாவளவன்-ப.சிதம்பரம் ஒரு மணி நேரம் இருட்டிலேயே பேசியுள்ளனர்.

தமிழ்நாடு இருட்டில் மூழ்கி கிடக்கிறது. மின்வெட்டால் காவிரி டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லாவற்றுக்கும் திமுகவே காரணம் என பழி போடுகிறது இந்த அரசு. பழி போடுவதில் காட்டும் ஆர்வத்தை மின்வெட்டை சீர்செய்யும் பணியில் காட்டலாம் என உதயநிதி கண்டனம் தெரிவித்தார்.

Related Stories: