அமோனியா கசிவு விவகாரம்: சட்ட விதிகளை மீறி பேரவை தலைவர் செயல்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு

சென்னை: : திருவள்ளூர் அருகே இறால் தொழிற்சாலையில் அமோனியா நச்சு வாயு கசிவால் ஏற்பட்ட உயிரிழப்பு தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து திமுக, அதிமுக எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

மேலும் அமோனியா வாயுக் கசிவு குறித்து பேரவையில் விவாதிக்க திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதிக்க விடுத்த கோரிக்கையை நிராகரித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களை முதலில் பேச அனுமதிக்காமல், 110 விதியின் கீழ் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸை விளக்கம் அளிக்க சபாநாயகர் அழைத்ததால் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

பேரவையில் நேரமில்லா நேரம் பட்டியலில் இல்லை என கூறி சபாநாயகர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதிக்க மறுப்பு தெரிவித்து விட்டார். தொடர்ந்து கூச்சலிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்ட விதிகளை மீறி பேரவை தலைவர் செயல்படுகிறார் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். மேலும் எதிர்க்கட்சியினர் பேச மைக் ஆன் செய்யப்படவில்லை எனவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

பல முறை கூச்சலிட்டு கோரிக்கை விடுத்தும் அமோனியா வாயுக் கசிவு குறித்து பேரவையில் விவாதிக்க அனுமதி இல்லை என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 110 விதியின் கீழ் அமைச்சர் அறிக்கை படித்த பிறகு விவாதம் கிடையாது என சபாநாயகர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து உள்ளார்.

Related Stories: