“ஊழல் சக்தி”-னு நீங்களே சொன்ன அதிமுக MLA-க்களுக்கு மச்சம் வைத்து தூய சக்தியா மாத்திட்டீங்க போங்க.!!

சென்னை: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மீதான தீரமானம் மீதான விவாதத்தின் போது பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், இந்த ஆட்சியின் முன்பு பல பிரச்னைகள் உள்ளன. அதில் கவனம் செலுத்தாமல், அடுத்த கட்சியில் இருந்து ஆட்களை இழுப்பதில்தான் முழு முயற்சி நடக்கிறது.

ஆள் பிடிக்கும் வேலையை விட்டுவிட்டு, ஆட்சி நிர்வாகத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். தேர்தலுக்கு முன் ஊழல் சக்தி என்று விமர்சித்த அதிமுக-வை சேர்ந்த MLA-க்களுக்கு மச்சம் வைத்து தூய சக்தியா மாத்திட்டீங்க என்று ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏ-க்களையும், அவர்களை தவெக-வில் இணைத்து கொண்டதையும் கடுமையாக விமர்சித்தார்.

உங்களின் இந்த செயலை தான் தீர்ந்துபோன சக்திகளிடம் திருடும் காய்ந்து போன சக்தியாக தவெக இருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் சில நாட்களுக்கு முன் விமர்சித்ததை இங்கு நினைவுபடுத்துகிறேன் என்றார்.

பயிர்கடன் தள்ளுபடி குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரத்தின் போது மறுஜென்மத்தில் விவசாயியாக பிறக்க ஆசைப்படுகிறேன் என்று பிரச்சாரத்தில் முதல்வர் கூறினார். ஆனால் “விவசாயியாக பிறக்க மேலும் ஒரு ஜென்மம் தேவையில்லை.. எப்போது நினைத்தாலும் விவசாயி ஆகலாம்” என்று குறிப்பிட்டார்.

தவெக-வினர் அரசு பள்ளிகளுக்குள் புகுந்து செய்யும் அத்துமீறல்களையும், சினிமாவில் வரும் குத்து பாடல்கள், இரட்டை அர்த்தமுள்ள பாடல்களை பள்ளிகளில் ஒளிபரப்பப்படுவதையும் ஏற்க முடியாது என்று பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Related Stories: