சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது. ஜூன் 19,22,23 ஆம் தேதிகளில் சட்டமன்றக் கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டம் இன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. தமிழக பொறுப்பு கவர்னரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தனது உரையை ஆங்கிலத்தில் பேசினார். அவர் பேசி முடித்ததும், கவர்னர் உரையை தமிழில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வாசித்தார்.
இதன் பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 19,22,23 ஆகிய 3 நாட்கள் நடத்த கூட்டத்தில் முடிவெடுக்கபட்டுள்ளதாக பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார். மேலும், ஜூன் 23 ஆம் தேதி ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் பதிலளிக்கிறார்.
பேரவை நிகழ்வின் தொடக்கத்திலும் முடிவிலும் இரு முறை தேசிய கீதம் பாடப்பட்டதில் எந்த தவறும் இல்லை. பேரவை நிகழ்வுகளை எப்படி கையாளுவது என்பது குறித்தும் நேரலை செய்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது என்று ஆய்வுக்குழு கூட்டத்தில் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
