சென்னை: இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட கோவில் வளாகத்தில் இருக்கக்கூடிய பூஜை பொருள் கடைகளில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்துதல் கட்டாயம் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
கோவில்களின் வளாகங்களில் இயங்கும் கடைகளில் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட பூஜை பொருள்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் பூஜைக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்களை தரமான பொருட்களாகவே வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி. விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது. அதை தாண்டி அதிகமான விலைக்கு பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து அறநிலையத் துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வெளியே வழித்தடங்களை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து பூஜைப் பொருள்களை விற்பனை செய்யக் கூடாது. கடைகள் சுற்றியும் குப்பைகள் இல்லாமல் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறநிலையத் துறை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பைகளில் பூஜைப் பொருள்களை அடைத்து விற்பனை செய்யக் கூடாது. மஞ்சள் துணிப் பையை மட்டுமே பொருள்களை வழங்க வேண்டும் என்றும் பக்தர்கள் கேட்காத பொருட்களை வாங்கச் சொல்லி கடைக்காரர்கள் வற்புறுத்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளுடைய சுற்றறிக்கை அனைத்து இந்து சமய அறநிலைத்துறைக்கு கோவில்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
