மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்ட நீட் வினாத்தாள்

திருநெல்வேலி: இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21- ஆம் தேதி மதியம் 02.00 மணி முதல் மாலை 05.15 மணி வரை நடைபெறவுள்ளது. கடந்த மே 3- ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 21 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர்.

இந்த நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த தேர்வை முழுமையாக ரத்துச் செய்வதாக மத்திய கல்வி அமைச்சகமும், தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையும் அறிவித்திருந்தனர்.

இந்த சூழலில் நீட் மறுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிவதை தடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் வினாத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் டெல்லியில் இருந்து மதுரைக்கு ராணுவ பாதுகாப்புடன் விமானம் மூலமாக கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு வினாத்தாள், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருநெல்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் முதலாவது ஹெலிகாப்டர் வந்து இறங்கியுள்ளது. அஞ்சல்துறை சார்பில் வினாத்தாள் கொண்டுவர நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது. இந்த வினாத்தாள் பாரத ஸ்டேட் வங்கியில் இருக்கக்கூடிய லாக்கரில் வைக்கப்படவுள்ளது. மேலும் மற்றொரு ஹெலிகாப்டர் வர இருப்பதாக கூறப்படுகிறது. அதில் வரக்கூடிய வினாத்தாள்கள் கனரா வங்கியின் லாக்கரில் வைக்கப்படவுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 13,000- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நீட் மறுதேர்வை எழுதுகின்றனர். இந்த வினாத்தாள்கள் ஜூன் 21ஆம் தேதி அன்று தேர்வு மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Related Stories: