கன்னியாகுமரி ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில் போலி நகை அடகுவைத்து மோசடி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.2.65 கோடி மோசடி செய்துள்ளனர்.

ஆரல்வாய்மொழி பகுதியில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் தங்க நகை அடமானக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே வங்கியில் அதிகாரிகள் திடீரென தணிக்கை மேற்கொண்டனர். அப்போது போலி தங்க நகைகளை அடகு வைத்து ரூ.2.65 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கபட்டுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் முருகேசன், நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். இந்த விசாரணையின்போது மோசடியில் ஈடுபட்டதாக கூட்டுறவு வங்கி பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட 7 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதில் வங்கியின் எழுத்தர் முத்துகிருஷ்ணன் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள 6 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருவதாகக் குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இந்த கூட்டுறவு வங்கியில் செயலாளர் மற்றும் எழுத்தர்களின் சொத்துக்கள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மோசடி பணத்தில் இவர்கள் சொத்து வாங்கியுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் விசாரணை முடிவில் இவர்கள் வேறு இடத்தில் சொத்துக்கள் வங்கியுள்ளார்களா பண மோசடியில் ஈடுபட்டார்களா என்பது குறித்து தெரியவரும் குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: