பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் விதியை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்பதை உறுதி செய்யவும், தேவையான வழிகாடுதல்களை உருவாக்கக் கோரிய வழக்கில்
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பதில்தர ஆணையிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், இயக்குநர் பதில் தர ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பள்ளி கட்டணம் குறித்து அரசாணை வெளியிட்டும், எவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என ஐகோர்ட் கிளை கேள்வியெழுப்பியுள்ளது.

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரசு கடந்த 2008ஆம் ஆண்டு நிதி தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணைக்கு முரணாக தற்போது அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றன.

இது சம்பந்தமாக தொடரப்பட்ட பொதுநல மனு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசாணை வெளியிடும் பள்ளிகள் எப்படி அதிக கட்டணம் வசூல் செய்கிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து பள்ளி கல்வி துறை விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெற்றோரே நீதிமன்றத்தை அணுகலாம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பள்ளி தரப்பு கூறியது.

Related Stories: