கிருஷ்ணகிரி அருகே பல ஆண்டுகளாக குவியல் குவியலாக கிடக்கும் மாங்கூழ் கழிவுகளால் சுகாதார சீர்கேடு என புகார்

கிருஷ்ணகிரி அருகே பல ஆண்டுகளாக குவியல் குவியலாக கிடக்கும் மாங்கூழ் கழிவுகளால் சுகாதார சீர்கேடு என புகார் அளிக்கப்பட்டுள்ளது. சப்பாணிப்பட்டியில் மாங்கூழ் தயாரிக்கும் ஆலையின் கழிவுகள் தனியார் நிலத்தில் குழிகள் வெட்டி கொட்டப்படுகின்றன. மாங்கூழ் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு, நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாங்கூழ் கழிவுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: