ஈரோடு: ஈரோட்டில் வாங்கிய கடனுக்காக கிட்னியை விற்க சொல்லி மிரட்டுவதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். ஜவுளி வியாபாரம் செய்யும் பெண், பைனான்சியர் கிருஷ்ணகுமாரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடன் ரூ.2 லட்சத்துக்கு அதிக அளவில் வட்டி செலுத்தியுள்ளதாக பெண் வேதனை அடைந்துள்ளார். கிட்னியை விற்பனை செய்வதற்கு ஆள் இருப்பதாகவும், விற்பனை செய்து பணத்தை தருமாறும் மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார்.
