பெரம்பலூர் – துறையூர் சாலையில் கார் மீது லாரி மோதியதில் காரில் பயணித்த 3 பேர் உயிரிழப்பு!

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே டி.களத்தூர் பிரிவு சாலையில் இன்று காலை நடந்த கோர விபத்த்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சங்கர்(37), அரியலூரைச் சேர்ந்த விஜய்(30) உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். மற்றொரு நபரின் அடையாளம் காணப்படவில்லை. பெரம்பூரைச் சேர்ந்த சங்கர், தன்னுடைய நண்பர்களான அரியலூர் மாவட்டம் அண்ணாசிநல்லூரைச் சேர்ந்த விஜய் உள்ளிட்ட நண்பர்களுடன் காரில் பெரம்பலூர் அருகே துரையூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து நேரிட்டது.

இதில் காரில் வந்த மூவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், மூவரின் உடல்களைக் கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து தெலங்கானாவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஜலீல் பாஷா என்பவரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் , அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: