சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு

 

சென்னை: சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்தது. அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்த 4 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தும் பணிகளை ஆணையம் தொடங்கிய நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது, கட்சி தாவல் தடை சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் வகையில் நடவடிக்கை; தகுதி நீக்க நடவடிக்கைக்கு ஆளான 4 எம்எல்ஏக்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது சட்டவிரோதம் என மனுவில் கூறியுள்ளனர். அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.

Related Stories: