2022-ல் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பாக ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மீது சிபிசிஐடி வழக்கு

 

சென்னை: 2022-ல் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பாக ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. அதிமுக அலுவலக மோதலின்போது ஓ.பி.எஸ்ஸுடன், வைத்திலிங்கம் ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் உடன் இருந்தார். வைத்திலிங்கம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் ஜே.சி.டி. பிரபாகர் சேர்க்கப்படவில்லை. அதிமுக அலுவலக மோதல் விவகாரத்தில் ஜே.சி.டி.பிரபாகரை தவிர்த்துவிட்டு மற்றவர்கள் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் மீது 4 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: