வாட்டர் பாட்டில் கூலிங் இல்லாததால் டீக்கடை உரிமையாளரை தாக்கிய 3 போதை வாலிபர்கள் கைது

குடியாத்தம், ஜூன் 8 : குடியாத்தம் அரசு மருத்துவமனை எதிரே உமாபதி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் 3 வாலிபர்கள் நேற்று போதையில் டீக்கடைக்கு வந்து, வாட்டர் பாட்டில் வாங்கி உள்ளனர். அப்போது வாட்டர் பாட்டில் ஏன் கூலிங் இல்லை என டீக்கடை உரிமையாளர் உமாபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போதையில் இருந்த 3 வாலிபர்களும் உமாபதியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த உமாபதி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் டீக்கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது அந்த வாலிபர்கள் அதே பகுதியில் சுற்றி திரிந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து 3 வாலிபர்களையும் பிடித்து விசாரணை செய்ததில், குடியாத்தம் அடுத்த சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் என்கிற தமிழரசன்(25), குடியாத்தம் சுண்ணாம்பு பேட்டை பகுதியை சேர்ந்த வாசுதேவன்(25), குடியாத்தம் தாழையாத்தம் பகுதியை சேர்ந்த விக்கி (23) என்பது தெரியவந்தது. பின்னர், 3 பேரையும் பிடித்து 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

 

Related Stories: