அணைக்கட்டு அருகே 14 வயது சிறுமி கூட்டு பலாத்காரத்தில் 2 பேர் போக்சோவில் கைது

வேலூர், ஜூன் 8: அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் காதர் பாட்ஷா(47), இதயத்துல்லா(22), பெயிண்டர்கள். இந்நிலையில், காதர் பாட்ஷாவின் உறவினரான 14 வயது சிறுமியை காதர் பாட்ஷா சாக்லேட், ஸ்னாக்ஸ் வாங்கி தருவதாக அழைத்து சென்று அவரது வீட்டின் பின்புறத்தில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், காதர்பாஷாவுடன் வேலை செய்யும் இதயத்துல்லாவும் சேர்ந்து இருவரும் சிறுமியை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனராம். கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை சிறுமியை காதர் பாட்ஷா, இதயத்துல்லா இருவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்வதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் விசாரித்தபோது, உறவினரான காதர்பாட்ஷா, இதயத்துல்லா ஆகியோர் தான் கர்ப்பத்துக்கு காரணம் என தெரிவித்தாராம். இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, காதர்பாஷா, இதயத்துல்லா ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

 

Related Stories: