வெளிநாட்டில் இருந்து ஐதராபாத்துக்கு விமானத்தில் வந்த 3 பேருக்கு எபோலா அறிகுறி: மற்ற பயணிகளை கண்டறியும் பணி தீவிரம்

 

ஐதராபாத்: ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று அதிகாலை 2 பேர் சென்றனர். அவர்களை டாக்டர்கள் பரிசோதித்தனர். இதில், ஆரம்பக்கட்ட அறிகுறிகளின் அடிப்படையில் அவர்களுக்கு எபோலா இருக்கலாம் என சந்தேகித்தனர். உடனே அவர்கள், காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையில், நேற்று இதேபோன்ற அறிகுறிகளுடன் மற்றொரு நபரும் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ‘காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 3 சந்தேக நபர்களும் வெளி நாட்டிலிருந்து ஐதராபாத்துக்கு விமானத்தில் வந்தது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவ நிபுணர்களும் விமான நிலைய அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டனர். குறிப்பிட்ட அந்த விமானத்தில் பயணித்த மற்ற பயணிகளின் விவரங்களை சேகரிப்பதில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்களில் யாருக்கேனும் ஒத்த அறிகுறிகள் உள்ளதா என்பதை கண்டறிய கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Related Stories: