தவெக தலைமையில் கூட்டணியா.? பிரவீன் சக்கரவர்த்தியின் அதிக பிரசங்கித்தனம் – சிபிஎம் கண்டனம்

சென்னை: தவெக தலைமையிலான புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி நிறுத்தப்பட்டு இருப்பதாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவிற்கு சிபிஎம், சிபிஐ கட்சிகள் மறுப்பு தெரிவித்து உள்ளன.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கண்டனம், புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.

கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளது என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனவே பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை “அதிக பிரசங்கித்தனம்” என்று தான் சொல்ல வேண்டும் என கூறி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அதே போல பிரவீன் சக்கரவர்த்தி பதிவிற்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் முத்தரசன் கூறி இருக்கிறார். தவெக தலைமையிலான கூட்டணையில் நாங்கள் இல்லை, பாஜக உள்ளே நுழைந்து விட கூடாது என்பதற்காகவே தவெக-விற்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து உள்ளோம். திமுக கூட்டணியில் தொடர்வதாகவே மு.வீரபாண்டியன் ஏற்கனவே கூறி இருக்கிறார். எனவே தற்போதும் திமுக கூட்டணியில் தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது, `சமூக நீதி முற்போக்கு கூட்டணியில் நாங்கள் இல்லை என்று தெளிவுபடுத்தி உள்ளார்.

Related Stories: