புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ள அண்ணாமலை – அடுத்த தேர்தலிலேயே போட்டி என அறிவிப்பு

சென்னை: பாஜக-வில் இருந்து விலகி இருக்கும் அண்ணாமலை, புதிய கட்சி துவக்க போவதாக அறிவித்துள்ளார். அதோடு தமிழகத்தில் வரவிருக்கும் அடுத்த தேர்தலிலேயே தனது புதிய கட்சி போட்டியிடும் இன்றி அறிவித்து அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளார்.

இது குறித்து சோஷியல் மீடியா நேரலையில் பேசிய அண்ணாமலை, கடந்த 18 மாதங்களாக பாஜக தலைமையுடன் கருத்து வேறுபாடு நீடித்தது. கடந்த டிசம்பர் 4-ம் தேதியே பாஜக-வில் இருந்து விலகுவதை தெரிவித்துவிட்டேன். தேர்தல் பணிகளை முடித்து விட்டு செல்ல கூறியதால் கட்சி தலைமை வேண்டுகோளை ஏற்று தேத்தல் பணிகளில் ஈடுபட்டேன் என்றார். மேலும் பாஜகவில் இருந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுத் தந்தது இல்லை. தமிழ்நாட்டின் அடையாளத்தோடு பாஜக இருக்க வேண்டும் என விரும்பினேன் என குறிப்பிட்டார்.

ஒரு புதிய அரசியலை, அடிப்படை கட்டமைப்பை மாற்றக்கூடிய அரசியலை உருவாக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் பாஜக-வில் இருந்து வெளியே வருகிறேன். அரசியலை பொறுத்த வரை நீரோட்டம் போல புதிய தலைவர்கள் வந்து கொண்டே தான் இருக்க வேண்டும். அதே போல நடிகர் ரஜினிகாந்த் 2020-ஆம் ஆண்டுஅவர் துவங்குவதாக இருந்த கட்சியில் சேர என்னை அழைத்தார். ஆனால் அவரின் அழைப்பை ஏற்க மறுத்து பாஜக-வில் இணைவதாக அவரிடம் தெளிவாக கூறினேன் என்றார்.

நிரந்தர எம்எல்ஏ, நிரந்தர எம்.பி என்ற நிலையை உடைக்க வேண்டும். அதே போல நாம் செய்ய நினைக்கும் விஷயங்கள் மிக பெரியது என்பதால் என்னோடு வருவோருக்கு பொறுமை தேவை என்றும் அண்ணாமலை கேட்டு கொண்டுள்ளார். அரசியலில் சண்டை போடுவது நம் நோக்கமல்ல, மாற்றம் ஒன்றே இலக்கு என்று கூறி இருக்கிறார். தனது புதிய கட்சி குறித்து பேசி இருக்கும் அண்ணாமலை முதலில் இயக்கமாக அனைவரையும் உள்ளே கொண்டு வந்து, பிறகு அரசியல் சொல்லி கொடுத்து கட்சியாக மாற்றுவேன். நான் தொடங்கவுள்ள தனி இயக்கம் தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத் தேர்தலில் கட்சியாக போட்டியிடும்.

சிறந்த மூளைகளை அரசியலுக்கு கொண்டுவருவேன்; அதற்கு சிறிதுகாலம் அவகாசம் தேவை தமிழ்நாட்டின் அரசியல் மொழி, இலக்கணத்தை மாற்ற வேண்டும் என்பதே விருப்பம். சமரசமில்லாத கொள்கை கொண்ட இயக்கமாக வழிநடத்துவதே என் இலக்கு என்று கூறினார். தான் துவங்க உள்ள இயக்கத்தின் கொள்கை “மாறுவோம்… மாற்றுவோம்” என்பதாகும் என அண்ணாமலை கூறி உள்ளார்.

Related Stories: