5 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட்; நியூசிலாந்து செல்லும் இந்தியா: அட்டவணை வெளியீடு

மும்பை: சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அக்டோபர் மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் டி20 போட்டிகள், பின்னர் ஒருநாள் தொடர், இறுதியாக டெஸ்ட் போடிகளில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் டி20 அக்டோபர் 22ம் தேதி, 2 டி20 24ம் தேதி கிறிஸ்ட் சர்ச் ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடக்கிறது. 3டி20 27ம் தேதி வெல்லிங்டன் ஹன்ரி மைதானத்திலும், 4 டி20 ஆக்லாந்து ஈடன் பார்க் மைதானத்திலும், 5டி20 ஹாமில்டன் செடான் பூங்கா மைதானத்திலும் நடக்கிறது. இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

நவ.4ம் தேதி ஆக்லாந்து ஈடன் பார்க் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி நடக்கிறது. நவ.7ம் தேதி 2வது ஒருநாள் போட்டி வெலிங்டன் ஹன்ரி மைதானத்திலும், நவ.10ம் தேதி 3வது ஒருநாள் போட்டி ஹாமில்டன் செடான் பூங்கா மைதானத்திலும் நடக்கிறது. 13ம் தேதி 4வது ஒருநாள் போட்டியும், 15ம் தேதி 5வது ஒருநாள் போட்டியும் மவுண்ட் மவுங்கானுய் பே ஓவல் மைதானத்திலும் நடக்கிறது. இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி நவ. 19-23 வரை வெலிங்டன் பேசின் இருப்பு மைதானத்திலும், 2வது டெஸ்ட் போட்டி நவ.27-டிச.1 வரை கிறிஸ்ட் சர்ச் ஹாக்லி ஓவல் மைதானத்திலும் நடக்கிறது.

7 ஆண்டுகளுக்கு பின்…
7 ஆண்டுகளுக்கு பின் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு ஆஸி அணியுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடியது. அந்த தொடரை 3-2 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

பிட்ஸ்:
பாகிஸ்தான் சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் வென்ற நிலையில், நேற்று முன்தினம் இரவு நடந்த 3வது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. 3வது போட்டி இன்று நடக்கிறது.

இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி நடக்க உள்ளது. டெஸ்ட் போட்டி நியூசண்டிகரில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராவதற்காக இந்திய அணி வீரர்கள் நேற்று பயிற்சியை தொடங்கினர். அதே நேரத்தில் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா உடல்தகுதியை நிரூபிக்க பெங்களூரு சிறப்பு மையத்துக்கு வருமாறு பிசிசிஐ அழைப்பு விடுத்து உள்ளது.

Related Stories: