மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மார் உட்பட 13 கால்பந்து ஜாம்பவான்களுக்கு கடைசி உலகக்கோப்பை தொடர்

அர்ஜென்டினா: பிபா உலகக்கோப்பை போட்டி ஜூன் 11ம் தேதி தொடங்கி ஜூலை 19ம் தேதி வரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் நடக்கிறது. மொத்த 48 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. இந்த உலகக்கோப்பை தொடர் 13 ஜாம்பவான்களுக்கு கடைசி தொடர் என்று கூறப்படுகிறது.

அதன்படி, அர்ஜென்டினா லியோனல் மெஸ்ஸி (39), போர்ச்சுகல் கிறிஸ்டியானோ ரொனால்டோ ( 41), குரோஷியா லூகா மோட்ரிக் (40), ஜெர்மனி மானுவல் நியூயர் (40), போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா எடின் டிசெகோ (40), மெக்சிகோ கில்லர்மோ ஓச்சோ (40), எகிப்து மொஹமட் சலா (33), பிரேசில் நெய்மார் (34). அர்ஜென்டினா நிக்கோலஸ் ஓட்டமெண்டி (38), பிரேசில் கேசெமிரோ (34), நெதர்லாந்து விர்ஜில் வான் டிஜ்க் (34), கொலம்பியா ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் (34), தென் கொரியா சன் ஹியுங்-மின் (33) ஆகிய 13 பேருக்கு இந்த உலகக்கோப்பைதான் கடைசி தொடராக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் இந்த தொடரை காண மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

 

Related Stories: