பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஸ்வரேவ், ஆண்ட்ரீவா அரையிறுதிக்கு தகுதி

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் 4வது சுற்று போட்டியில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ஜப்பானை சேர்ந்த ஒசாகா ஆகியோர் மோதினர். இதில் 7-5,6-3 என்ற செட் கணக்கில் சபலென்கா வெற்றி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதி சுற்றில் நம்பர் 8 வீராங்கனையான ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, ரோமேனியாவின் சொரானா சிர்ஸ்டியா ஆகியோர் மோதினர். இதில் அதிரடியாக ஆடிய ஆண்ட்ரீவா 6-0,6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் உக்ரைன் நாட்டு வீராங்கனையான ஸ்விடோலினா, சக நாட்டு வீராங்கனை கோஸ்ட்யூக்குடன் மோதினார். இதில், 3-6, 6-2, 2-6 என்ற செட் கணக்கில் கோஸ்ட்யூக் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் நம்பர் 2 வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஸ்பெயினின் ரபேல் ஜோடார் மோதினர். இதில் 7-6, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்வரேவ் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories: