நார்வே செஸ் தொடர்; இந்திய வீரர்கள் அசத்தல்: சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்பு

ஆஸ்லோ: சர்வதேச நார்வே செஸ் தொடர் ஆஸ்லோவில் நடந்து வருகிறது. இதில் 7வது சுற்று ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்களான குகேஷ், பிரக்ஞானந்தா, மகளிர் பிரிவில் திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்றனர். உலக சாம்பியான குகேஷ் ஓபன் பிரிவில் அமெரிககவின் கிராண்ட் மாஸ்டர் வெஸ்லி சோவை எதிர்கொண்டார். ஆட்டம் டிராவில் முடிய டை பிரேக் ஆட்டத்தில் குகேஷ் வெஸ்லி சோவை வீழ்த்தி 1.5 புள்ளிகள் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் 8 புள்ளிகளை குகேஷ் பெற்றுள்ளார். மற்றொரு ஓபன் பிரிவில் போட்டியில் பிரக்ஞானந்தா, பிரான்ஸ் வீரர் அலிரேசா பிரேஸ்ஜாவை வீழ்த்தி 3 புள்ளிகளை அள்ளினார். இதன் மூலம் பிரக்ஞானந்தா 9 புள்ளிகளை பெற்றார்.

ஓபன் பிரிவில் 12.5 புள்ளிகளுடன் அமெரிக்காவின் வெஸ்லி சோ முதலிடத்திலும், அலிரேசா 10 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்ல்சன் மற்றும் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மர் ஆகியோர் 9 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளனர். குகேஷ் 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருந்தாலும், இன்னும் 3 சுற்றுகள் மீதமுள்ளதால் சாம்பியன் பட்டத்திற்கான வாய்ப்பு அனைத்து வீரர்களுக்கும் சமமாக உள்ளது.

Related Stories: