தான் பேசுவதற்கு ஏதாவது ஆதாரத்தை முதல்வர் விஜய் காட்ட முடியுமா? கத்தி கத்தி பேசுனா, பொய் எல்லாம் உண்மை ஆகிடுமா?: அதிமுக பகிரங்க எச்சரிக்கை

சென்னை: கத்தி கத்தி பேசுனா, பொய் எல்லாம் உண்மை ஆகிடுமா? தான் பேசுவதற்கு ஏதாவது ஆதாரத்தை முதல்வர் விஜய் காட்ட முடியுமா? என்று அதிமுக பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. முதல்வர் விஜய் நேற்று திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசும்போது, அதிமுகவை கடுமையான விமர்சனம் செய்து பேசி இருந்தார். விஜய்யின் பேச்சுக்கு அதிமுக ஐடி விங்க் சார்பில் பதிலடி கொடுத்து சமூகவலைதள பதிவில் கூறி இருப்பதாவது:

இன்றைய முதல்வரின் உரையை குறிப்பிட சரியான வார்த்தை இது தான்! தான் இருக்கும் பதவிக்கான பொறுப்பை கொஞ்சம் கூட உணராமல், எந்தவொரு தவறுக்கும் பொறுப்பேற்க மனமில்லாமல் ஆச்சரியக்குறித்தனமாக பேசியுள்ளார். சட்டம் ஒழுங்கை சீர்செய்ய காவல்துறைக்கு அதிகாரிகளை நியமித்துவிட்டால் போதுமா? நிர்வாகம் தானாக செயல்படுமா? என்னயா புது உருட்டா இருக்கு இதெல்லாம்..? இவர் மீது பழிபோடுகிறார்களாம். தனது ஆட்சியில் இத்தனை குற்றங்கள் நடக்கிறதே, இத்தனை மரணங்கள், பெண்கள் பாதுகாப்பு இல்லையே.. இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட உங்கள் முகத்திலோ, பேச்சிலோ கவலை, வருத்தம் தெரிந்ததா? இதை சரிசெய்ய வேண்டும் என்ற Responsibility தெரிந்ததா? இது Narcissism இல்லாமல் வேறென்ன? ‘எல்லாத்துக்கும் முந்தைய ஆட்சி தான் காரணம்’ என்று சொல்வது பெயர் தான் மாற்றமா? முந்தைய ஆட்சியில் நிதி மோசமாக இருந்ததை இப்போது தான் கண்டுபிடித்தீர்களா? இதில், இவர் ஆட்சிக்கு வரக்கூடாது என கூட்டு சதி செய்தார்களாம், சூழ்ச்சி செய்தார்களாம்…

அப்புறம்? கத்தி பேசுனா, கத்தி பட டயலாக் modulation-ல பேசுனா, பொய் எல்லாம் உண்மை ஆகிடுமா? தான் பேசுவதற்கு ஏதாவது ஆதாரத்தை இன்றைய முதல்வர் காட்ட முடியுமா? மாறாக, ஆட்சிக்கு வருவதற்கு முன்னே தவெக நடத்த துவங்கிய குதிரை பேரத்திற்கு அவர்கள் வெளியிட்ட அமமுக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரின் கையெழுத்து வீடியோவே சாட்சி நம்பர் 1! இவ்வளவு வாய்கிழிய பேசும் மானஸ்தர், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அதிகார வலைவீசி விலைபேசி, தலைமைச் செயலகத்தின் கீழ்மாடியில் ராஜினாமா செய்ய வைத்து, மேல்மாடியில் கட்சி இணைப்பு விழா நடத்திய அரசியல் கேவலத்தை (வரப்போகும் வழக்கின் முக்கியமான சாட்சி) பற்றி ஏன் ஒருவார்த்தை கூட பேசவில்லை? எங்களை ‘மற்றும் பலர்’ என்று வாயளவில் சொல்லும் இவர்கள், அடுத்து இங்கிருந்து யாரை இழுக்கலாம் என்றே மனதளவில் 24 மணிநேரமும் அதிமுக நினைப்பாகவே இருப்பது ஏன்? ஆனா ஒன்னு… ரெண்டே பேருக்கு நடுவுல தான் போட்டியே… எதுல? எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது என்பதை மட்டும் நினைவிற்கொள்க. நீங்க கோட்டு போடுங்க.. போயஸ் கார்டன்ல வீடு கூட வாங்குங்க… யாரு கவலைப்பட்டா? உலகமே உங்களை சுத்தி தான் இயங்குற மாதிரி சும்மா நசநச-ன்னு புலம்பிட்டு இருக்காதீங்க நடிகர் விஜய். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: