சட்டம்-ஒழுங்கை சீரமைத்து மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்: தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

 

சென்னை: சட்டம்-ஒழுங்கை சீரமைத்து மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்: தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ளது. ஒன்றிய அரசு மாநில அரசுகளை வஞ்சிக்கக் கூடாது. இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாது அணைத் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். திமுக கூட்டணிதான் மிகப்பெரிய கூட்டணி என்பதை யாறும் மறுக்கவில்லை.

கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் தேமுதிக சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். யாரை தீய சக்தி என்று சொன்னார்களோ அவர்களின் ஆதரவோடுதான் அரசு அமைத்துள்ளது தவெக. திமுக கூட்டணி ஆதரவு பெற்றே தவெக அரசு அமைத்துள்ளது. தற்போது தமிழ்நாட்டில் நடக்கும் அவலங்களை பட்டியலிட்டால் ஒருநாள் போதாது

தேமுதிகவுக்கு அதிமுக துரோகம் செய்ததாக பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதிமுகதான் ஐ.சி.யு.வில் உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் செய்துள்ளார். தேமுதிகவை குறைத்து மதிப்பீட்டதே எடப்பாடி பழனிசாமியின் இந்த நிலைக்கு காரணம். தேமுதிகவுக்கு துரோகம் செய்த அதிமுகவுக்கு, தவெக மூலம் பதிலடி கிடைத்துள்ளது. பெரும்பான்மை கிடைக்காதபோது எங்களையும் தவெக அணுகியது. மற்ற கட்சிகளிடம் யார் பேசினாரோ அதே நபர் எங்களிடமும் பேசினார்கள்.

Related Stories: