டெல்லி: உயர்நீதிமன்றங்கள் வழக்கு விசாரணை முடிந்த மூன்று மாதங்களில் தீர்ப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணைகள் முடிந்த பின்னரும் தீர்ப்பு வழங்குவது காலதாமதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு, அரசியல் சாசன பிரிவு 142 அடிப்படையில் தனி அதிகாரத்தை பயன்படுத்தி வழிகாட்டி நெறிமுறை வழங்கி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி உயர்நீதிமன்றங்கள் வழக்கு விசாரணை முடிந்த 3 மாதங்களில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜாமின் வழக்குகளில் விசாரணை முடிந்த மறுநாள் உத்தரவு பிறப்பிக்கவேண்டும். ஜாமின் உத்தரவுகளை உடனுக்குடன் சிறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை கைதிகள் உத்தரவு பிறப்பித்த அன்று அல்லது மறுநாள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், தீர்ப்பு விவரங்களை ஒருவாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல முக்கிய பரிந்துரைகளை வழங்கி உள்ளது.
