செனகல் நாட்டில் புதிய பிரதமர் நியமனம்

 

டக்கார்: செனகல் நாடு கடன் சுமை மற்றும் ஆளும் கட்சிக்குள் நிலவும் உட்கட்சிப்பூசல் எனப் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. அதிபர் பாசிரு டியோமாயோ பே-வுக்கும் பிரதமர் உஸ்மான் சோன்கோவிற்கும் இடையே பல மாதங்களாக கருத்து வேறுபாடுகள் நிலவிவந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளியன்று சோன்கோ பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இது அரசின் அனைத்து அமைச்சர்களும் பதவி விலகவும் அரசு கலைக்கப்படவும் வழிவகுத்தது. இந்நிலையில் செனகல் புதிய பிரதமராக அகமது அல் அமினு லோவை அதிபர் நியமித்துள்ளார். இதனை தொடர்ந்து புதிய அரசை அமைக்கும் பொறுப்பை அகமது அல் அமினு ஏற்றுள்ளார். அகமது அல் அமினு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் மத்திய வங்கியில் ஒரு நிர்வாகியாக பணியாற்றியவர்.

Related Stories: