பாகிஸ்தானில் 2 பேருந்துகள் மோதி 17 பேர் பலி

 

பெஷாவர்: பாகிஸ்தானில் நின்றிருந்த பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் மார்தான் மாவட்டத்தில் உள்ள ஸ்வாட் விரைவுச்சாலையில் பேருந்து ஒன்று பழுதாகி சாலையோரத்தில் நின்றுகொண்டு இருந்தது.

அப்போது அந்த வழியாக பயணிகளை ஏற்றிவந்த மற்றொரு பேருந்து நின்றிருந்த பேருந்தின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: