ஷென்சோ-23 விண்கலம் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி சீனா சாதனை…

பெய்ஜிங்: விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி சீனா புதிய சாதனை படைத்தது உள்ளது. ஷென்சோ-23 (Shenzhou-23) என்ற விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை சீனா அனுப்பி உள்ளது. Shenzhou-23 திட்டம் சீன விண்வெளி வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்பட விண்வெளி வீரரின் முழுமையாக ஒரு வருட விண்வெளிப் பயணம், ஹாங்காங் நகரத்திலிருந்து விண்வெளிக்குச் செல்லும் முதல் நபர், அதிநவீன தானியங்கி இணைப்புத் தொழில்நுட்பம், 2030 நிலவுப் பயணத்திற்கான சோதனைக்களம் ஆகிய 4 காரணங்கள் முக்கியமானவையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து,Long March-2F என்ற ராக்கெட்டை பயன்படுத்தி, ஷென்சோ-23 விண்கலம் மூன்று சீன விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்டது. இதன் மூலம் விண்வெளி வீரர்களை அனுப்பி, சீனாவின் தியன்காங் (Tiangong) விண்வெளி நிலையத்தில் ஒரு முழு ஆண்டு தங்கும் புதிய சாதனையை தொடங்கியுள்ளது. தனது தியன்காங் விண்வெளி நிலையத்திற்கு மூன்று விண்வெளி வீரர்களை சீனா அனுப்பி உள்ள நிலையில்,இந்த மூவரில் ஒருவர் சீன விண்வெளி நிலையத்தில் ஒரு வருடம் தங்க உள்ளார்.

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவில் தரையிறக்கும் தனது லட்சியத்தை நோக்கி சீனா செயல்பட்டு வரும் நிலையில், விண்வெளியில் நீண்ட காலம் இருப்பதால் மனித உடலில் ஏற்படும் நீமாற்றங்கள் (எலும்பு அடர்த்தி குறைதல், கதிர்வீச்சு தாக்கம்) குறித்து சீனா ஆய்வு நடத்த உள்ளது. சீன விண்வெளி வீரர்ககளின் இந்த சமீபத்திய பயணம், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விண்வெளிப் பயணங்களிலேயே மிக நீண்ட காலப் பயணங்களில் ஒன்றாக அமையும். எனினும் 1995-ஆம் ஆண்டில் ஒரு ரஷ்ய விண்வெளி வீரர் செய்த பதினான்கரை மாத கால சாதனையை இது முறியடிக்காது. இதனிடையே விண்வெளி பயணத்தின் முன்னேற்ற நிலையை பொறுத்து, இந்த ஓராண்டு பயணத்தை மூவரில் முழுமையாக மேற்கொள்ள போகும் வீரர் யார் என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்று சீனா கூறி இருக்கிறது.

Related Stories: