சிங்கப்பூரில் விசா காலாவதியான 13 பேரை பணியமர்த்திய இந்தியர் கைது

 

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் விசா கலாவதியான 13 பேரை பணியமர்த்திய இந்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் உள்ள ஹவ்காங் பகுதியில், அந்நாட்டு குடிவரவு மற்றும் சோதனைச்சாவடிகள் ஆணைய அதிகாரிகள் கடந்த 3ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கனோஜியா ரீகன்(29) என்ற இந்தியர், விசா கலாவதியான 19 முதல் 44 வயதுக்குள்பட்ட 13 இந்தியர்களை சட்டவிரோதமாக தன் குடியிருப்பில் தங்க வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நடப்பாண்டு மார்ச் வரை அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 11 பேர் ஆண்கள் மற்றும் 2 பெண்கள் ஆவர். மேலும், 13 பேரும் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி பணிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர். இதையடுத்து 13 பேரும் கைது செய்யப்பட்டு சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தப்பட்டனர். இதேபோல், சட்டவிரோதமாக தங்கிய இந்தியர்களுக்கு அடைக்கலம் கொடுத்த கனோஜியா ரீகனையும் சிங்கப்பூர் குடிவரவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: