திருச்செந்தூர் செல்லும் ரயிலில் பயணிடம் நகை பறிக்க முயற்சி – பெண் கைது

திருச்செந்தூர்: நெல்லை – திருச்செந்தூர் செல்லும் ரயிலில் பயணியிடம் நகை பறிக்க முயன்ற பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நித்யா மற்றும் 14 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்த ரயில்வே போலீசார் அவர்களிடமிருந்து 3 சவரன் நகையை கைப்பற்றினர். ரயிலில் தமிழ்ச்செல்வி என்பவரின் கழுத்தை நெரித்து நகையை பறிக்க முயன்றபோது அவர் கூச்சலிட்டதால் இருவரும் பிடிபட்டனர்.

Related Stories: