சென்னை: சென்னை மற்றும் காம ராஜர் துறைமுகத்தின் சாதனைகள் மற்றும் முன்னெடுப்பு பணிகள் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு துறைமுக ஆணையர் அலுவலகத்தில் ேநற்று நடந்தது. இதில், சென்னை துறைமுக ஆணைய தலைவர் விஸ்வநாதன், காமராஜர் துறைமுக தலைவர் ஐரீன் சிந்தியா கூறியதாவது: சென்னை துறைமுக ஆணையமும், காமராஜர் துறைமுக நிறுவனமும் 2025-26 நிதியாண்டில் இணைந்து 107 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு சாதனையை நிகழ்த்தியுள்ளன. 24-25 நிதியாண்டில் இந்த இரு துறைமுகங்களும் சேர்ந்து 103.37 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை மட்டுமே கையாண்டிருந்தன.
இதில் சென்னை துறைமுகம் 57.90 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளையும், காமராஜர் துறைமுகம் 49.08 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளையும் தனித்தனியாக கையாண்டுள்ளன. கொள்கலன்கள், கச்சா எண்ணெய், கார்கள் மற் றும் உரங்கள் என நான்கு முக்கிய பிரிவுகளிலும் சென்னை துறைமுகம் இதுவரை இல்லாத உச்சபட்ச செயல்திறனை பதிவு செய்துள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு ஒவ்வொரு 80 வினாடிக்கும் ஒரு கார் இத்துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. காமராஜர் துறைமுகம் நிலக்கரி, கொள்கலன்கள், ஆட்டோமொபைல் மற்றும் திரவ சரக்குகள் ஆகிய பிரிவுகளில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும், ரூ.440 கோடி மதிப்பிலான தூர்வாரும் பணிகள் மூலம் கடலின் ஆழம் 18 மீட்டராக அதிகரிக்கப்பட்டு, உலகின் மிகப்பெரிய கப்பல்களும் நுழைய முடியும் வகையில் ‘கேப் கம்ப்ளையண்ட்’ துறைமுகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கப்பல்கள் துறைமுகத்தில் தங்கி திரும்பிச் செல்லும் நேரமும் கணிசமாக குறைந்துள்ளது.
சென்னை துறைமுகத்தில் இந்த நேரம் 44.72 மணிநேரமாகவும் (8.23% முன்னேற்றம்), காமராஜர் துறைமுகத்தில் 43.27 மணிநேரமாகவும் (7.27% முன்னேற்றம்) மேம்பட்டுள்ளது. இதனால் கப்பல் நிறுவனங்களுக்கு நேரமும் பணமும் மிச்ச மாகிறது. வருமானத்திலும் இரு துறைமுகங்களும் புதிய சாதனை படைத்துள்ளன. இரண்டும் சேர்ந்து ரூ.2,400 கோடிக்கும் மேலான செயல்பாட்டு வருமானம் ஈட்டியுள்ளன. சென்னை துறைமுகம் ரூ.1,185.01 கோடி வருமானம் பெற்று, வரிக்கு முன் ரூ.434.29 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
